Monday, October 29, 2012

கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-மந்திரி மீது செருப்பு வீச முயன்றவர் கைது

மராட்டிய முதல்-மந்திரி பிரித்விராஜ் சவான்இ நேற்று சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று எழுந்து நின்ற ஒரு பார்வையாளர் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்இ முதல்-மந்திரியை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினார்.

முதல்-மந்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அப்புறப்படுத்த முயன்ற போதுஇ சற்றும் எதிர்பாராத வகையில் தனது செருப்பை கழற்றி முதல்-மந்திரியை நோக்கி வீச முயன்றார். கரும்பு விவசாயிகள் இந்த கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கக்கூடும் என எதிர்பார்த்த போலீசார் மேடையின் அருகே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

எனினும் பத்திரிகையாளர்கள் பகுதிக்குள் நுழைந்த உள்ளூர் விவசாய சங்கத்தை சேர்ந்த மகேஷ் கேதார் என்ற நபர் முதல்- மந்திரியை நோக்கி செருப்பை வீச முயன்றது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் சோலாப்பூர் போலீஸ் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் முதல்- மந்திரியின் நிகழ்ச்சியில் சற்று நேரம் சலசலப்பு நீடித்தது. பின்னர் எந்த இடையூறுமின்றி பேசி முடித்த பிரித்விராஜ் சவான்இ அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நாக்பூர் சென்றார்.

1 comments :

Anonymous ,  October 29, 2012 at 6:49 PM  

society always needs dicipline peace and order,throwing the sandles on the opponent is just only an ugly act
of an indiciplined and barberic human being.There is nothing to appreciate.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com