புத்தகாயா மகாவிகாரையின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள புத்தகாயா மகா விகாரையின் பாதுகாப்புகள் பலப்படுத் தப்பட்டுள்ளன. விகாரைமீது, தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வந்துள்ள செய்தியை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புத்தகாயா விகாரை மீது தாக்குதல் நடத்து வதற்கு தயாராகவிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் 3 சந்தேக நபர்கள் புதுடில்லியில் வைத்து கைதுசெய்யப் பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவின் முஜாஹிதீன் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் காரணமாக விகாரையின் மகாபோதி உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகளில், அதிகளவான அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment