இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Wednesday, October 17, 2012

கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்த மனைவி கைது

தொலைக்காட்சியில் எந்த அலைவரிசை பார்ப்பது என்ற தகராறில், ஆத்திரம் அடைந்த மனைவி கணவனை வெட்டி கொலை செய்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ரஷ்யா வில் உள்ள டுலா நகரில் வசிக்கும் தம்பதிக்குள் நேற்று தொலைக்காடசி பார்க்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவி ஒரு சனலையும், கணவன் வேறோரு சனலையும் பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து கணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்

தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் பெண் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com