Friday, October 5, 2012

வடக்கு மாகாண சபையிலும் திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

வடக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு முரண் அற்ற வகையில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலளார் மாகாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்ட மூலத்தை நாடாளுன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்து மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய குறித்த சட்டமூலத்திற்கு 8 மாகாணசபைகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன. எனினும் இதுவரை உருவாக்கப்டாத வடக்கு மாகாணசபை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய இயங்காத ஒரு மாகாண சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிகள் என்ன என அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முரணற்ற வகையில் திவிநெகும சட்ட மூலம் வடமாகணத்தில் நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com