நீதவான் முன்னிலையில் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்த புலிச்சந்தேக நபர்.
இன்று மொனறாகலை மஜிஸ்றேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட புலிச்சந்தேக நபர் ஒருவர் நீதவான் முன்னிலையில் பிளேட் போன்றதோர் கூரிய ஆயுதத்தினால் தனது கழுத்து , நெஞ்சுப்பகுதி மற்றும் கையில் வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்ற நபரே மேற்படி முயற்சியில் இறங்கியவராவார்.
2009ம் ஆண்டு ஜால காட்டுப்பகுதியில் 7 விவசாயிகளை சுட்டுக்கொன்றார் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள இவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, இவர் மீதான வழக்கு தொடர்பில் இதுவரை சட்ட மா அதிர் திணைக்களத்திலிருந்து அலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவித்ததை தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் வெட்டி கேதீஸ்வரன் மேற்படி தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட சிறை அதிகாரிகளும் பொலிஸாரும் அவரை மடக்கிப்பிடித்து மொனறாகலை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று சிகிச்சையின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர் ஏற்படுத்தி கொண்ட காயங்கள் பாரதூரமானவை அல்ல என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment