Thursday, October 4, 2012

அவுஸ்திரேலிய விமான விபத்தில், 6 பேர் பலி

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 6 பேர் பலியாகி யுள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லன்ட் பிரதேசத்தில் இவ் விபத்து இடம்பெற்றது. குறித்த விமானம், பயன்பாட்டுக்கு பொருத்த மற்ற மிகப் பழைய விமானமென, அவுஸ்திரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் சிதைவுகள், நீர்த்தேக்கமொன்றின் அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவ்விமானத்தின் பரப்பு மற்றும் விபததுக்குள்ளான விதம் தொடர்பாக, நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காலநிலை சீராக இருந்த போதிலும், இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை, அவுஸ்திரேலிய விமானப்பயணத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துமென, அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com