Sunday, October 14, 2012

கிளர்ச்சியாளர்களால் சிரிய இராணுவ அதிகாரிகள் 256 பேர் கைது

சிரியாவில் அரச இராணுவ அதிகாரிகள் 256 பேரை, அந்நாட்டு கிளர்ச்சியாள ர்கள் கைது செய்துள்ளதாகவும், யுத்த த்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவ ங்களின் போதே அவர்கள் கைது செய் யப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் இடிலிப் பகுதியில் வைத்தே, குறித்த 256 பேரும் கைதுசெய்யப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கிளர்ச்சியாளர்களால் கைதுசெய்யப்பட்ட சிரிய அரசின் இராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் என்பன ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை சிரியாவின் எல்லைப்பகுதியில் ஏற்பட்டு வருகின்ற தொடர் மோதல் சம்பவங்கள் காரணமாக துருக்கி விமானங்கள் சிரிய எல்லைப்பகுதிக்கு வருவதை தடை செய்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com