Thursday, October 25, 2012

10 வருட கால விசாரணையின் பின் 10வருட கால கடூழிய தண்டனை

லலித் அம்பன்வல, திராவக வழக்கின் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறை தண்டனை. 10 ஆண்டுகால வழக்கு விசாரணையின் பின்னர், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டி அரச கணக்காய்வாளராக பணியாற்றிய லலித் அம்பன்வல, கல்வித்திணைகளதில் இடம்பெற்ற மோசடிகளை அம்பலப்படுத்தியமையினால், கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி திராவக தாக்குதலுக்கு உட்பட்டார்.

மத்திய மாகாண கல்வித்திணைக்களத்தின் பல ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியமையே, இத்தாக்குதலுக்கான காரணமென, சந்தேகிக்கப்பட்டதுடன் தாக்குதலில், அவரது ஒரு கண் கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக 10 வருடங்கலக விசாரணை இடம்பெற்றது. கண்டி, மாகாண நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கின் இறுதி தீர்ப்பு, இன்று உயர் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேனவினால்வழங்கப்பட்டது. அப்போது கண்டி கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய ஆனந்த முனசிங்க, மத்திய மாகாண கல்வித்திணைக்களத்தின் பிரதம கணக்காய்வாளராக கடமையாற்றிய ஆனந்த வீரசிங்க, அப்பகுதியின் பிரபல வர்த்தகரான மொஹமட் ராஸிக் மொஹமட் ரெஹான், ஹூஸைன் செய்யத் முஹம்மது ஷாபி, மொஹமட் நிலவ்பர், மொஹமட் றியால், இப்ருள் ரஹ்மான், மொஹமட் இம்தியாஸ் ஆகிய 7 பேருக்கு எதிராக 8 குற்றச்சாட்டுக்களின் கீழ், வழக்கு விசாரiகைள் இடம் பெற்றது.

குற்றவாளிகளுக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டு, படுகொலை செய்வதற்கு முயற்சித்தமையும், அதற்கு துணையாக இருந்தமையும் ஆகும். இதற்கு குறித்த 7 பேரும், குற்றவாளிகள் என, தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், இதற்காக 7 பேருக்கும் 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் 10 லட்சம் ரூபா வீதம், அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனை முழுவதுமாக செலுத்த வேண்டுமென்றும், அதனை செலுத்த தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் வீதம் கடூழிய சிறை தண்டனை வழங்கப்படுமென, தீர்ப்பளிக்கப்பட்டது.

திராவக தாக்குதல் நடாத்தி, படுகொலை முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டில், 5 ஆம் , 6 ஆம், 7 ஆம் பிரதிவாதிகள் குற்றவாளிகள் என்றும், இதற்காக அவர்கள் மூவருக்கும் மேலும் 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் 2 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், இதனை செலுத்த தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுமென்றும், தீர்ப்பளிக்கப்பட்டது. வர்த்தகர் மொஹமட் ராஸிக், மொஹமட் ரெஹான், மூன்றாம், 4ஆம், 5 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகாக கருதப்பட்டதுடன், அந்த ஒவ்வொரு குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் வீதம், மேலும் 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இரண்டு லட்சம் ரூபா வீதம் அபராதம் செலுத்த வேண்டுமென்றும், இதனை செலுத்த தவறினால், மேலும் 6 ஆண்டுகள் சிறை தணடனை வழங்கப்படுமென, தீர்ப்பளிக்கப்பட்டது. திராவக தாக்குதலுக்கு உட்பட்ட, லலித் அம்பன்வலவிற்கு நட்டஈடாக 50 லட்சம் ரூபா செலுத்தப்பட வேண்டுமென, நீதிமன்றம் உத்தரவிட்டது. நான்காவது பிரதிவாதியான மொஹமட் ஷாபி என்பவருக்கு, 6 ஆம் , 7 ஆம், 8 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு குற்றாவளியாக கருதப்பட்டதுடன், இதனடிப்படையில் அவருக்கு மேலும் 20 ஆண்டுகள் வீதம், 60 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. சகல சிறை தணடனைகளும், ஒரே முறையில் வழங்கப்பட வேண்டுமென, நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com