கெமிகல் ஆயுதங்களை பயன்படுத்தினால் எமது நடவடிக்கை கடுமையாக இருக்கும் - Fr. எச்சரிக்கை
சிரியா ஜனாதிபதி பஷார் அசாத், "எமது நாட்டுக்குள் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், வெளிநாடுகள் ஏதாவது இராணுவ ரீதியாக தலையிட்டால், நாம் கெமிகல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்" என இரு தினங்களுக்கு முன் கூறியிருந்த கருத்துக்கு, சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில், இராணுவத்தால் கெமிகல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், "எமது நடவடிக்கை கடுமையாக இருக்கும்" என பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் Laurent Fabius, சிரியா ஜனாதிபதியின் கூற்று தொடர்பாக அமெரிகாக, பிரிட்டன் மற்றும் வேறு சில நட்பு நாடுகளுடன் பேசியுள்ளோம். சிரியா எக்காரணம் கொண்டும் கெமிகல் ஆயுதங்களை உபயோகித்தால், எமது நடவடிக்கை பெரிய அளவில் இருக்குமென்றும், கெமிகல் ஆயுதங்களை உபயோகிப்பதுதான், சிரியா அரசுக்கான "ரெட் லைன்". அந்த கோட்டை அவர்கள் தாண்டினால், எமது படைகளை சந்திக்க நேரிடும்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்காவும், பிரிட்டனும் ஏற்றுக் கொண்டுள்ளன எனவும், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
சிரிய ராணுவத்திடம் மஸ்டார்டு கேஸ் உள்ளிட்ட ரசாயன குண்டுகள் உள்ளன. அவற்றை வைத்து தொலைதூர தாக்குதல்களை நடத்தக்கூடிய ஸ்கட் ரக ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment