Wednesday, September 12, 2012

சொத்து விபரங்களை அறிவிப்பீர்.. மாகாண சபை உறுப்பினர்களுக்க தேர்தல் ஆணையாளர் உத்தரவு.

வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல், கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களின் சொத்து விபரங்களை, வெள்ளிக்கிழமைக்கு முன்னர், தேர்தல் செயலகத்திற்கு அறிவிக்குமாறு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்மூன்று மாகாண சபைகளுக்குமான தோதலில், 107 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதேவேளை, தேர்தலில், கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற மாவட்ட ரீதியான விருப்பு வாக்குகள் மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரங்கள், தேர்தல்கள் செயலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக தெரிவித்தார். இவ்விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன், தேர்தலில் வெற்றிபெற்றோரின் பெயர் விபரங்களை வர்த்தானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com