Friday, September 28, 2012

போலிச் சான்றிதழ் வழங்கி அரச சேவையில் இணைய முயன்ற இருவர் கைது

றுகுணுப் பல்கலைக் கழகம் மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றதாக போலிச் சான்றிதழ்கள் சமர்ப்பித்த, திக்குவலை உருகமுவைச் சேர்ந்த 26 வயது யுவதியும், தெவுந்தரயைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரும், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச சேவையில் பயிலுனர்களின் நேர்முகப் பரீட்சையின் போது குறித்த நபர்கள் போலிச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக மாத்தறை அரசாங்க அதிபர் திருமதி கே.கே. அத்துகோரளை, பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com