இந்திய இராணுவக் குடும்ப இளைஞர்கள் இலங்கையில்
இலங்கைப் பாடசாலை மாணவர்கள் தமிழ் நாட்டில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிடாது தடுக்கப்பட்டாலும், இந்திய இராணுவக் குடும்பங்களில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் "விருதரு" அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கைகு நல்லுறவுச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்கள்.
5 நாள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு ஆகஸ்டு 31 ல் வந்த இவர்களை "விருதரு" அமைப்பின் தலைவரான தேசானி ஜயசூரியா வரவேற்றார். வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற கண்டி, சீகிரியா, தம்புள்ளை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு இந்த இந்திய இளைஞர்கள் விஜயம் செய்துள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment