"பிள்ளையின் பிரதிநிதிகளை உடனே வெளியேற்று" - ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்!
ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் பிரதிநிதிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என தெரிவித்து, ஜாதிக ஹெல உறுமய கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் செயலகத் திற்கு முன்பாக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் "நவநீதம் பிள்ளையின் பிரதிநிதிகளை உடனே வெளியேற்று", "இங்கே பார்வையிடுவதற்கு ஒன்றும் இல்லை", "நாட்டைப் பிரிப்பதற்கு துணைபோகாதே", "ஆப்கானிஸ்தான் ஈரான் போன்ற நாடுகளுக்கு செல்" என்று கோசமெழுப்பியதுடன், அவ்வாறு எழுதப்பட்ட வாசகங்களடங்கிய பதாகைகளை தாங்கி நின்றார்கள்.
அதன்பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை முற்றுகையிட முற்பட்டனர். அதனையடுத்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையரின், ஹெனி மெகாலி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் அரச தரப்பினரையும் த.தே கூ. குழுவினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வடக்கிற்கும் விஜயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment