புலிகளின் முன்னால் மண்டியிட்ட சிலர் இன்று நாட்டை காட்டிக் கொடுக்க முனைகிறார்கள்.
2005 ஜனாதிபதித் தேர்தலின் போது பயங்கரவாதத்தில் இருந்து இந்த நாட்டை விடுதலை செய்யுங்கள் என்று மட்டுமே சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டார்கள் என்றும், அன்று எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் முன்னால் மண்டியிட்ட சில தலைவர்கள், இன்று பன்னாட்டுப் பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொது விளையாட்டரங்கில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு இன்று அபிவிருத்தியை நோக்கி முன்செல்ல ஆரம்பித்துள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதே அரசின் ஒரே நோக்கம் எனவும், நாட்டு மக்கள் எல்லோரும் சாதி, இன, மத பேதங்களை மறந்து நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைத்தால் மாத்திரமே, அதை அடைய முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்கால பரம்பரையினர் உலக சவால்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம், புதிய தொழில் நுட்ப வசதி, திறமையான ஆசிரியர்கள் போன்ற சகல பௌதிக மற்றும் மனித வளங்களை கிராமத்துப் பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிறுவர்களின் மனதைக் கெடுக்கக் கூடிய செயல்களில் ஈடுபடவேண்டாம் என சகல அரசியல் கட்சிகளையும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment