பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை
700 கி.மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஹாப்ட்-7 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக சோதனை நடத்தியது. ஹாப்ட்-7 என்கிற பாபர் ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது.
மிகவும் துள்ளியமாக நிலம் மற்றும் கடல் பகுதியில் பறந்து சென்று தாக்க வலுமிக்க இதன் இலக்கு இந்தியாவை தாக்குவது தான்.
ஆனால் இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தானின் ஸ்தரத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் உதவும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவை பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment