Tuesday, September 11, 2012

சமாதானம் என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? உலகிற்க்கு புகட்டியுள்ளோம்!

பயங்கரவாதத்தை தோற்கடித்து, சமா தானத்தை நிலைநாட்டி, ஜனநாய கத்தை உறுதி செய்து, உலகெங்கும் முன்மாதிரியை காண்பித்துள்ளோம். உலகிற்கு சமாதானம், ஜனநாயகத்தின் பெறுமதியினை புகட்டியுள்ளோமென, ஜனாதிபதி பொதுநலவாய சபை பாராளுமன்ற மாநாட்டில் வலியுறுத்தினார்.

பொதுநலவாய சபை பாராளுமன்ற சங்கத்தின் 58 வது அபிமானம் பொருந்திய மாநாடு, இன்று காலை தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

உலகின் 54 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தியும், பாராளுமன்ற கிளைகளை பிரதிநிதித்துவப்படுத்தியும், 800 க்கும் அதிகமானோர், இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். மாநாட்டின் பிரதம அதிதியாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

பொதுநலவாய சபையின் பொது செயலாளர் கமலேஷ் ஷர்மா, பொதுநலவாய சபையின் பாராளுமன்ற சங்க தலைவரும், இலங்கை பாராளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ உட்பட உள்நாட்டு வெளிநாட்டு பிரபுக்கள் பலரும், அங்குரார்ப்பண விழாவில் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து, முழு தேச மக்களுக்கும், சமாதானத்தினதும், ஜனநாயகத்தினதும் உரிமையினை வழங்கி, அபிமானம் பொருந்திய தேசத்தை கட்டியெழுப்ப, இலங்கை அரசாங்கத்திற்கு முடிந்ததாகவும் இதன்மூலம் இம்முறை மாநாட்டுக்கு அநுசரணை வழங்க, இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்புகிடைத்தமை, பெருமைக்குரியதென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மலர்ந்த சமாதானத்தின் பயன்களை சகல மக்களுக்கும் பெற்றுத்தருவதே, இலங்கை அரசின் நோக்கம். ஜனநாயகத்தின் சுதந்திரம், இரு நாட்ளுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்தே இந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள, உலக பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. வடக்கில் அடுத்த ஆண்டில், மாகாண சபை தேர்தலை நடாத்தி, அம்மக்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமென்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமாக, ஜனநாயக ரீதியில் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தேர்தலுக்கு பின்னரே, நீங்கள் அனைவரும் கூடியுள்ளீர்கள். 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது. மக்கள் எவ்வாறு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய செயற்பட்டார்கள் என்பதை, உங்கள் அனைவருக்கும் காண முடிந்தது என தெரிவித்தார்.

இலங்கையின் ஜனநாயக பாராளுமன்றத்திற்கு நீண்டகால வரலாறு காணப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பல தேர்தல்களை நடாத்தியுள்ளேன். அடுத்த ஆண்டு வட மாகாணத்திலும் தேர்தலை நடாத்தவுள்ளேன். ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலேயே, நாம் எமது நாட்டில் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

பயங்கரவாதத்தின் கசப்புணர்வுகளை மறந்து, மீள இந்நிலைமைகள் ஏற்படாதிருக்க, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக, பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில், அடிப்படையற்ற போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு ஏமாற்றமடையாது, இலங்கையின் உண்மையான நிலைமையினை நேரில் கண்டு, விளக்கம் பெறுமாறும், ஜனாதிபதி உலக பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

துரதிஷ்டவசமாக இலங்கை தொடர்பாக போலி பிரசாரங்கள் ஒரு சில நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையற்ற பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் தற்போது இலங்கையின் உண்மையான நிலைமைகளை நேரில் காண முடியும். இலங்கை மக்களின் உண்மையான ஜனநாயகத்தை உங்களுக்கு நேரில் அவதானித்து விளக்கம் பெற, வாய்ப்பு கிடைத்துள்ளது.

அங்குரார்ப்பண விழாவை தொடர்ந்து, பாராளுமன்ற மாநாடு, தற்போது பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com