மனைவியை கொன்று உடலை கொதிநீரில் அவித்த கணவன்
மனைவியை கொன்று உடலை கொதிநீரில் அவித்த கணவன் வேக வைத்து தடயங்களை மறைத்த தலைமை சமையல்காரருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகரை சேர்ந்த டேவிட் வீன்ஸ் (49). அவருடைய மனைவி டான் (39). இருவரும் தனியாக ரெஸ்டாரன்ட் நடத்தி வந்தனர். கடந்த 2009ம் ஆண்டு ஒக்டோபர் 18ல் ரெஸ்டாரன்டில் கணிசமான பணம் காணாமல் போயுள்ளது.
இதனால் மனைவி மீது சந்தேகப்பட்ட டேவிட் மனைவியிடம் பணத்தை கோட்டு சண்டையிட்டுள்ளார். அன்று இரவு வீட்டில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்து மனைவியை கட்டிப்போட்டார். வாயில் டேப் சுற்றி தரையில் கிடத்திவிட்டு உறங்கி விட்டார்.
மறுநாள் எழுந்து பார்த்த போது மனைவி இறந்து கிடப்பதை பார்த்து டேவிட் அதிர்ச்சி அடைந்தார். பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், மனைவியின் உடலை பெரிய டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றினார். உடல் மூழ்குவதற்கு அதன் மீது எடை வைத்தார். பின்னர் தண்ணீரை கொதிக்க விட்டார். தொடர்ந்து 4 நாட்கள் சிறிது சிறிதாக மனைவியின் உடலை வேக வைத்து அப்புறப்படுத்தினார். ஆனால், மண்டை ஓடு மட்டும் அப்படியே இருந்தது.
இதற்கிடையில் மனைவி காணாமல் போனதாக பொலிஸில் புகார் செய்துள்ளார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து டானை தீவிரமாக தேடி வந்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் டேவிட் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் வீட்டில் சோதனை நடத்திய போது, டான் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக டேவிட்டை வலைவிரித்து தேடினர் பொலிஸாருக்கு உண்மை தெரிந்து விட்டதை அறிந்த டேவிட் கலிபோர்னியாவுக்கு தப்பி சென்றது மட்டுமல்லாமல் பொலிசுக்கு பயந்து மலையில் இருந்து குதித்து விட்டார். படுகாயம் அடைந்த அவரை பொலிஸார் மீட்டு வைத்திய சாலையில் சேர்த்தனர் பின்னர் டான் கொலை வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் நடந்தது. அப்போது உண்மையை ஒப்புக் கொண்டார் டேவிட். இதையடுத்து அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments :
Post a Comment