Saturday, September 8, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெள்ளைவேன் வாக்கு மோசடி தொடர்பில் புலன்விசாரணை.

நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெள்ளைவேன் கோஷ்டியினர் வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிப்போர் மற்றும் ஏழைகளின் வாக்குகளை விலைக்கும் இலவசமாகவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கல்முனைப்பிரதேசத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் மற்றும் சில இளைஞர்களை வெள்ளை வேன்களில் ஏற்றிக்கொண்டு பல வாக்குச்சாவடிகளிலும் கள்ள வாக்கு போடும் மோசடியில் ஈடுபட்டதாக அறியக்கிடைக்கின்றது.

இவ்வாறு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடிக்கு கள்ளவாக்கு போடச்சென்ற வான் ஒன்றை பிரதேச இளைஞர்கள் மறித்துள்ளனர். இது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியபோது வானில் வந்தவர்கள் ஒடித்தப்பிவிட்டுதாகவும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் தெரியவருகின்றது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com