Monday, September 10, 2012

இணையமொன்றுக்கு புலநாய்வுக்காச்சல் பிடித்துள்ள கதை தெரியுமோ?

உலகத்துக்கு உரிமைகோரும் இணைத்தளம் ஒன்று இருக்கெல்லோ. அதுர லொள்ளு என்றால் தாங்கவே முடியல பாருங்கோ, எடுத்ததுக்கெல்லாம் எங்கட புலநாய்வு செய்தியாளரின் செய்தியென்று அவிக்கிற அவியலை தாங்கவே முடியலங்க. கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்திருக்கிற நிலையில் முடிவுகளும் வெளிப்படையா அறிவிக்கப்பட்டிருக்கிறதுடன், தேர்தலில வென்றவர்கள் தோற்றவர்கள் யாவருமே மோசடிகள் அற்ற தேர்தல் என தமது வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது சிறப்பம்சம்.

ஆனால் இந்த உலகத்து இணையத்தின்ர புலநாய்வின் புதிய கண்டு பிடிப்பு என்னென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்ர வாக்குகளை பிள்ளையானுக்கு விருப்பு வாக்காக்கினாங்களாம். ஆகக்குறைந்தது இந்த புலனாய்வுக்கு மோசடி எப்படி செய்கிறது என்று கூடத் தெரியாததுதான் நகைச்சுவை. சிலோன் இன்ஸ் ஹோட்டல் மசாச் கிளப்புக்கு காவலாளி வேலை செய்துபோட்டு புதுத்தொழில் தொடங்கினால் இப்பிடியெல்லாம் நடக்கும்.

ஏய் புலனாய்வு ஒரு கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்கை பல்வேறு வழிகளில் நிராகரித்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளுள் தள்ளலாமே தவிர ஒரு கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்கை மற்றொரு கட்சிக்கே மாற்ற முடியாது, இப்படி இருக்கிறபோது எப்படி புலநாய்வு ஒரு கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்கை பிறிதொரு கட்சியின் வேட்பாளரின் விருப்பு வாக்காவது என்று விளக்க முடியுமா?

;;;இதுக்கு மேல வேற நான்கு முஸ்லிம் காங்கிரஸ் காரரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரன் ஒருவரையும் அரசாங்கம் பணம்கொடுத்து வாங்கவுள்ளதை புலநாய்வு கண்டு பிடித்துபோட்டுதாம். மலையகத்து வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இளைஞர்களுக்கு தேயிலைதோட்டத்து சம்பளத்தை விட சில ரூபாய்களை கொடுத்து சிங்கள இணையச்செய்திகளை தமிழுக்கு மொழிபெயர்த்து அதற்கு இனவாத உப்பு புளி சேர்கிறத்துக்கு பெயர்தான் புலநாய்வோ?

நான்கு முஸ்லிம் காங்கிரஸ் காரரும் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரனும் அரசுடன் சேர தயார் என்கின்ற செய்தி அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற விமல் வீரவன்சவின் இணையத்தளமான லங்காசீநியூஸில் இருந்து எடுக்கபட்டது என்றத மகாஜனங்களுக்கு சமர்பணம்.

නැගෙනහිර මුස්ලිම් කොන්ග්‍රස් 3 ක් හා TNA 1 ක් ආණ්ඩුවට ?
September 10, 2012 at 8:56 am | Lanka C News.


නැගෙනහිර පළාත් සභා මැතිවරණ ප‍්‍රතිඵල අනුව එහි බහුතරය නිර්මාණය කිරීම සඳහා ශ්‍රී ලංකා මුස්ලිම් කොන්ග්‍රසයේ මන්ත්‍රීවරු තිදෙනෙක් සහ ද්‍රවිඩ ජාතික සන්ධානයේ එක් මන්ත්‍රීවරයෙක් රජයට සහාය පල කිරීමට කැමැත්ත ප්‍රකාශ කොට ඇතැයි තහවුරු නොකල ආරංචි මාර්ග සඳහන් කරයි.

මැතිවරණ ප්‍රතිඵල අනුව නැගෙනහිර පළාත් සභාවේ ආණ්ඩු පක්ෂ බලය සඳහා පැහැදිලි බහුතරයක් කිසිම දේශපාලන පක්ෂයක් සතුව නැත.

එක්සත් ජනතා සන්ධානයට නැගෙනහිර පළාත් සභා මැතිවරණයේදී තේරී පත්වූ මන්ත්‍රීවරුන් හා බෝනස් ආසන ද ඇතුළුව මන්ත්‍රීධූර 14 ක් හිමිව පවතින නිසා පළාත් සභා මැතිවරණ පනත අනුව නැගෙනහිර ආණ්ඩුකාරයා විසින් මහ ඇමතිවරයා පත් කොට පළාත් සභාවේ ආණ්ඩු පක්ෂයේ කටයුතු කිරීමට ආරාධනා කිරීම සාමාන්‍ය සම්ප්‍රදායයි.

නමුත් විපක්ෂයට මන්ත්‍රීධූර 14 කට වඩා තිබෙන බැවින් එකී බලය නිශේධනය කිරීම සඳහා ඉහත පැවසූ ආකාරයට විපක්ෂයේ මන්ත්‍රීවරුන්ගේ සහාය ලබා ගැනීමට සිදුව ඇත.

இலங்கைநேரப்படி காலை 6 மணிக்கு வெளியான செய்தி பிரித்தானிய நேரம் நண்பகலாகும்போது புலநாய்வுத்தகவலான நகைச்சுவை இதுதான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com