இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Tuesday, September 25, 2012

மாலினி பொன்சேகாவின் இராஜினாமாவை ஏற்க மறுத்தார் மஹிந்த ராஜபக்ஷ

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகாவின் இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள் வில்லை என ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐ.ம.சு.மு வின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான மாலினி பொன்சேகா, தனது இராஜினாமாக் கடிதத்தைப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவுக்கு அனுப்பி வைத்திருந்தார். எனினும் அந்த இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்வதில்லை என ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தள்ளார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்ற மாலினி பொன்சேகா இரண்டரை வருடங்களாகப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com