மும்மூர்த்திகளும் பிரபாகரனைவிடப் பயங்கரமானவர்களாம்! - சரத் என் சில்வா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய மும்மூர்த்திகளின் பலத்தை அழிக்காவிட்டால், பிரபாகர னால் ஏற்பட்டதை விட பயங்கரமான கேடு விளையும் என்று, முன்னாள் பிரதம நீதவான் சரத் என். சில்வா தெரிவிக்கினறார்.
அத்துடன், அமைச்சர்கள் இவர்களுக்குப் புகழ் பாடிக் கொண்டிருக்கிறனர் என்றும், கோப்புகளைத் தூக்கிக்கொண்டு போவதுதான் அமைச்சர்கள் செய்யும் வேலை என்றும், இந்த திரித்துவத்தை நாங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அன்று எங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது பிரபாகரன் மட்டுமே. பிரபாகரனை அடித்தது போல இந்த திரித்துவத்தை இலகுவாக உடைக்க முடியாது. மக்களின் வாக்கினால் இவர்கள் இந்த பலத்தைப் பெறுகிறார்கள். இவர்கள் பலத்தை அச்சுறுத்தி பெறாவிட்டாலும் வேறு எதையாவது கொடுத்து வாக்குகள் மூலம் சக்தியைப் பெறுகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த திரித்துவத்தை உடைப்பதற்கு நாம் ஜனநாயக அமைப்பிலான வழிமுறையைப் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment