Monday, September 24, 2012

இன்று சத்தியப் பிரமாணம் செய்த கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களின் விபரம்

கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன் னிலையில், ஜனாதிபதி மாளிகையில் வைத்து சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். இதன்போது தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராகவும், சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க கல்வி மற்றும் காணி அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு பதவிகளுக்கு ஹாபிஸ் நஸீர் அஹமட், விவசாய, நீர்ப்பாசன கால்நடைகள் அமைச்சராகவும் ,எம்.ஐ.எம். மன்சூர் சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் நிதி திட்டமிடல் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com