Tuesday, September 18, 2012

சனியின் சீற்றமா பிரித்தானிய அரச குடும்பத்திற்கு?

பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநிலத்தில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தபோது, இளம் பெண்களுடன் நிர்வாண கோலத்தில் லீலைகளில் ஈடுபட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் கடந்த வாரங்களில் இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதனால் பொரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் இருந்த பிரித்தானிய அரச குடும்பத்திற்கு, இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது தான் இளவரசி கேட்மிடில்டனின் அரை நிர்வாணமாக போட்டோ சர்ச்சை.

இளவரசி வில்லியம்ஸ், கேட்மிடில்டன் ஆகியோர் விருந்தினர் மாளிகையின் மேல் தளத்தில், மேலாடை இன்றி, அரை நிர்வாண கோலத்தில் இருந்தபோது, பெண் போட்டோகிராபர் ஒருவர் போட்டோ எடுத்து அதை பிரான்ஸ் பத்திரிகையில் வெளியிட்டது மட்டுமல்லாமல், அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும், அந்த போட்டோக்கள் அனைத்தையும் பெரும் தொகைக்கு விற்கப்பேவதாகவும் மிரட்டியிருந்தார்.

அதனால் ஆத்திரமடைந்த பிரித்தானிய அரச குடும்பம், பிரான்ஸ் சஞ்சிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததுடன், குறித்த போட்டோகிராபரான வாலரியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து, குறித்த போட்டோகிராபரை விசாரிப்பதற்காக பிரான்ஸ பொலிஸார் தேடிய போது அவர் தலைமறைவான விஷயம் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் தன்னிடமிருந்த இளவரசியின் அரை நிர்வாண போட்டோக்களை இத்தாலியப் பத்திரிகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்நிலையில், பிரித்தானிய இளவரசி கேட்மிடில்டனின் அரைநிர்வாண புகைப்படம் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பில், பிரான்ஸ் சஞ்சிகைக்கு எதிராக பிரித்தானிய அரச குடும்பத்தினரால் தாக்கல் செய்த வழக்கை இன்று விசாரித்த பாரீஸ் நீதிமன்ற நீதிபதி, எமிடில்டன் தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் அவரிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என அந்த பத்திரிகைக்கு உத்தரவிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com