தமிழ் நாட்டில் மண்டையைப் பிளக்கும் இனவாதம் - சம்பிக்க
இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யாத்திரிகராகக் செல்ல முடியாத அளவிற்கு, இனவாதம் மண்டையைப் பிளக்கின்றது என்றும், இவ்வாறான இனவாதிகளால், வடக்கிலும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய நிலைமை வெகு தூரத்தில் இல்லை என்று, அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் கம்பகா மாவட்ட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர் முடிந்து விட்டாலும் பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குகின்றோம். யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்றோம்.
சிங்களவரின் அந்த அர்ப்பணிப்பு இப்போது கீழே வீழ்த்தப்பட்டுள்ளது. நாங்கள் மாறினாலும் அவர்கள் மாறவில்லை. இனவாதம் நாள்தோறும் பெருகுகின்றது. 3000 ஆண்டுகள் என்று பொய்யான வரலாற்றை தமிழ் மக்களின் தலையில் போட்டுளார்கள்.
தமிழ் நாட்டின் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாரிய வேலைத்திட்டத்தை மேற்கொண்டுளார்கள். இது வடக்கையும் பாதிக்கும் என்று சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்..
0 comments :
Post a Comment