Thursday, September 13, 2012

மேடைகளில் கருத்து பேதங்கள் இருந்தாலும் உள்ளக ரீதியில் சிறந்த புரிந்துணர்வுடன் உள்ளோம்.

13 வது திருத்த சட்டத்தின் பிரகாரம், மாகாண சபையில் ஆட்சியமைப்ப தற்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் உள்ளது எனவும், கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளமையினால், கிழக்கு மாகாணத்தில் நிச்சயம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார் என்றும், அரசியல் ரீதியாக நாங்கள் மேடைகளில் கருத்து பேதங்களை கொண்டிருந்தாலும், உள்ளக ரீதியில் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் எங்கள் பணிகளை நாங்கள் உரிய வகையில் முன்னெடுப்போம் அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சர்வதேச சக்திகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. இது போன்ற அழுத்தங்களை நாங்கள் முன்னர் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த சில நாட்களில் நாங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட்டு 3 மாகாணங்களிலும் ஆட்சியமைப்போம் என தெரிவித்துள்ளர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com