Friday, September 28, 2012

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதையில் விட்டுச் செல்கின்றனர்

தற்போது பல்கலைக்கழக விரிவுரை யாளர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டு ள்ளனர் எனவும், அவர்கள் மாணவர் களின் எதிர்காலத்தை நடுத்தெருவில் விட்டு விட்டே இவ்வாறு செயற்படு கின்றனர் எனவும், தமது தொழில் தர்மம் குறித்து விரிவுரையாளர்கள் சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெஸ்லி கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்த தெரிவிக்கையில், மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பெறுப்பு ஆசிரியர்களிடமே உண்டு எனவும், உலகில் காணப்படும் சிறந்த தொழில் ஆசிரியர் தொழில் எனவும், எனினும் தற்தோதைய காலத்தை பொறுத்தவரையில் சம்பளம் இன்றி தொழிலில் ஈடுபட முடியாது. ஆனால் ஆசிரியர் தொழில் சம்பளத்துக்கு அடிபணியும் தொழிலாக அமையக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெற்றி எம்மை நோக்கி வரப் போவதில்லை நாமே வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் எனவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் வெற்றியை அடையமுடியுமெனவும, அபிவிருத்தி மூலம் கட்டியெழுப்பப்படும் நாட்டில், நிபுணத்துவம்மிக்கவர்கள் உருவாக்கப்பட வேண்டுமாயின் மாணவர்கள் தனக்கு தானே போட்டியுடன் கல்வி கற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் நலன் கருதியே ஆசிரியர்கள் செயற்பட வேண்டும். மாறாக ஆசியர்களுக்காக மாணவர்கள் இல்லை. மாணவர்களுக்காகவே ஆசிரியர்கள் எனவும், உலகில் ஏனைய நாடுகளை விட இலங்கை மக்களும் அரசாங்கமும் கல்வித்துறை மீது அதிக அக்கறை கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com