ஒபாமாவைப் போல ரவூப் ஹக்கீமும் காட்டிக் கொடுத்தவர்!
கிழக்கு மாகாண சபையில் மக்கள் விருப்பத்திற்கு முரணாக மாகாண சபையை அமைப்பதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதை முஸ்லிம் சமூகத்தில் உள்ள எவருமே அனுமதிக்கவில்லை, என கேகாலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முஸ்லிம் மக்களைக் காட்டிக் கொடுத்தார் என்றும், இஸ்லாம் சமயத்தை அவமதித்தார் என்றும், உலக மக்கள் பெருங் கோபத்தில் இருக்கின்றனர்". அது மாதிரியே இலங்கையில் முஸ்லிம் மக்களும், ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள் என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுக்கு எதிரான வேலைத் திட்டத்துடன்தான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. முஸ்லிம்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தார்கள். இதனாலேயே முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணத்தில் வாக்கு கிடைத்தது. ஆனால், இப்பொழுது அரசாங்கத்தின் பக்கம் சேர்நது முஸ்லிம் மக்களின் துரோகியாகி விட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment