608 தேங்காயை சுரேஸ் பிறேமச்சந்திரன் அபேஸ் பண்ணின கதை தெரியுமோ...
காணமல் போனவர்களை காளி கண்டுபிடித்து தரவேண்டும், அதற்காக 1008 தேங்காய் உடைக்கப்படும் என பேரம்பேசிவிட்டு கடைசியாக வழமைபோல் காளிக்கே கயிறு கொடுத்துள்ளார் நம்மட முன்னாள் மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். கடந்த 11ம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தேங்காய் உடைப்புக்கு 1008 தேங்காய் கொண்டுவருவதாக கணக்கு காட்டிய பிறேமச்சந்திரனார் 400 தேங்காய்களையே கொண்டுவந்தாகவும் 608 தேங்காய்களை அபேஸ் பண்ணிவிட்டதாகவும் காணாமல்போனோரின் உறவினர்கள் குமுறுகின்றனர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புள்ளிகளை நேரில் சந்தித்து தமது தேவைகளை விளக்க மக்கள் சிலர் அங்கு தவம்கிடந்தபோதும், அது நிறைவேறவில்லையாம். தேங்காய் உடைப்பு வெறுமனே ஊடகங்களுக்கு படம்பிடிப்பதற்கானதோர் நிகழ்வாக மாத்திரமே இருந்தாகவும், பொலிஸ் பாதுகாப்புடன் வந்திறங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் படப்படிப்பு முடிந்த பின்னர் பறந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு மக்களை சந்திக்காமல் சுரேஸ் குழுவினர் பறந்ததற்கான காரணத்தை தேடியபோது கிடைத்த பதில் மிகவும் சுவாரசியமானதாவும் நியாயமானதாகவும் உள்ளது.
இறுதி யுத்தத்தில் காணமல் போனோரைத்தேடி வவுனியா காளிகோவிலில் சுரேஸ் தேங்காய் உடைத்தால், சுரேஸே; தலைமையில் மண்டையன் குழுவினால் காணாமல் போனோரை தேடி எந்த கோவிலில் தேங்காய் உடைக்கலாம் என மக்கள் சுரேஸிடம் கேட்க தயாராகி இருந்ததை அறிந்தே அவ்விடத்தில் நிற்காமல் அண்ணாச்சி எஸ்கேப் ஆகியதாக அறியமுடிகின்றது.
2 comments :
எல்லோரும் சேர்ந்து அந்த எருமை மாட்டின் மண்டையை உடைத்திருக்க வேண்டும்.
கூட்டமைப்பு மிருகங்கள் மனிதர்கள் என்ற உருவத்தில், நொந்து போன அப்பாவி மக்களை மேலும், மேலும்
ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்குதுகள். இதுகளை விட மகிந்தர் எவ்வளவோ மேல்.
யாழ்ப்பாணிகள் தான் இந்த TNAயும் புலிகளையும் ஊட்டி வளர்த்தார்கள் , இன்றைக்கு உதவிக்கு தேவானந்தாவையும் தமிழ் தேசிய வெறிக்கு TNA யும் என போலி வாழ்க்கை வாழ்கின்றார்கள் , இவர்கள் திருந்தாத ஜன்மங்கள் , சொந்த மக்களை புலிகள் கொலை செய்யும் போது கோகோகோலா கொடுத்தவர்கள் , மறக்க முடியுமா எங்களால் ? இவர்களின் வாலை ஓட்ட நறுக்கிய மகிந்த ராஜபக்சே கடவுளுக்கு ஒப்பானவர்.
Post a Comment