Tuesday, September 25, 2012

புதிய கடற்படைத் தளபதியாக ஜயனாத் கொழம்பகே பதவியேற்றார்.

இலங்கையின் 18 வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் ஜயனாத் கொழம்பகே கடற்படைத் தலைமய கத்தில் நேற்று பதவியேற்றார். முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க நேற்று முதல் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

கண்டி சில்வெஸ்டர் கல்லூரியின் பழைய மாணவனான கொழம்பகே 1978 ல் கடெற் அலுவலராக சேர்ந்து, 1980 ல் அதிகாரி தரத்துக்கு உயர்த்தப்பட்டார். வடக்கு கிழக்குப் போரின் போது அவர் ஆற்றிய பணிக்காக ரணவிரு விசிஷ்ட சேவா விபூசன பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com