Thursday, September 20, 2012

தவறுதலாக வந்த தொலைபேசியால் உருவான காதல் மேஜரின் உயிரை எவ்வாறு பறித்தது?

காதல் தோல்வியால் இராணுவ மேஜர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்பு மாத்தறையில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நளின் சம்பத் குமார என்பவர் 37 வயதுடைய இராணுவ மேஜராவார். இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.

ஒருநாள் குறித்த இராணுவ மேஜரின் கையடக்கத் தொலைபேசிக்கு தவறுதலாக அழைப்பு, ஒன்று வந்தது. கல்விப் பொது தராதர சாதாரண தரம் படிக்கின்ற மாணவி ஒருவரே அவ்வாறு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டனர் அதன்பின்னர் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நேரில் சந்திக்காமல் தொலைபேசியிலேயே தமது காதலை ஓட்டினர்.

ஆனால், குறித்த இராணுவ மேஜர், தான் திருமணமானவர் என்பதையும், தான் இரு பிள்ளைகளின் தகப்பன் என்பதையும், புதிய காதலிக்கு வொல்லாமல் மறைத்துள்ளர். ஆதன் பின்னர் காதலியிடம் திருமணம் செய்வோம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது காதலை பெற்றோருக்கு தெரியப்படுத்திய மாணவி, மேஜரின் பெயர், அலுவலகம் ஆகியன குறித்த விபரங்களை பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

மாணவியின் காதலை கோட்ட குறித்த மாணவியின் தகப்பனுக்கு, மகளின் முகம் தெரியாத காதல் குறித்து பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த மேஜர் பற்றிய முழு விபரங்களையும் வெளி நபர்களிடம் இருந்து விசாரித்து தெரிந்து கொண்டார். ஆனால் தான் அறிந்து கொண்ட மேஜரின் தனிப்பட்ட விடயங்களை மகளுக்கு உடனடியாக சொல்லவில்லை.

இதனையடுத்து மேஜரை சந்திப்பு அழைத்துள்ளார் மாணவியின் தந்தை. காதலியின் தகப்பனால் அழைத்த இடத்துக்கு நேற்று முன் தினம் கப் வாகனம் ஒன்றில் மேஜர் சென்றுள்ளார். அப்போது தான் தனது காதலியை முதன் முதல் கண்டார் இராணுவ மேஜர்.

இச்சந்திப்பின் போது, ஏற்கனவே திருமணமான ஒவருக்கு தனது மகளை ஒரு போதும் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்றும், இனி மேல் காதலின் பெயரால் எனது மகளுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என்றும், எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்றும், மாணவியின் தகப்பன் உறுதியாக மேஜரிடம் தெரிவித்துள்ளார். தனது தகப்பன் தெரிவித்தவாறே காதலியும் மேஜரிடம் தெரிவித்துள்ளார்.

இப்படியெல்லாம் நடக்காது என எதிர்பார்த்திருந்த மேஜர், அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்து போயுள்ளார். அதனையடுத்து கப் வாகனத்தில் ஏறி கைக்குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

இவ்வாறான செயலால் பாதிக்கப்பட்டது யார்? மேஜரின் மனைவியும் அவரது பிள்ளைகளுமே தவிர வேறு யாரும் அல்ல.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com