Tuesday, September 18, 2012

மத்திய கிழக்கு நாடுகளையடுத்து இலங்கையிலும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

(படங்கள் உள்ளே) அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று, அம்பாறை, மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கான அழைப்பினை அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருந்தது.

இன் நடவடிக்கையால் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், அரசஅலுவலகங்களும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் "அமெரிக்கா ஒழிக, நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய், இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து" போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை அட்டாளைச்சேனை வரை இழுத்துச் சென்று எரித்தனர்.

இப் பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உருவ பொம்மை ஒன்றை தீயிட்டு எரிப்பதனையும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com