Sunday, September 16, 2012

கட்டுநாயக்காவில் துமிந்த இறங்கும் போதுதான் எனது போராட்டம் ஆரம்பமாகும் – ஹிருனிகா.

துமிந்த சில்வா கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கும் போதுதான், எனது உண்மையான போராட்டம் ஆரம்பமாகும் என்று, படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷமன் பிரேமசந்திராவின் மகள் ஹருனிகா சூளுரைத்துள்ளார்.

கட்டுநாயக்காவில் துமிந்த வந்து இறங்கும் போது, அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். தனது தந்தை படுகொலை செய்யப்பட்ட போதும், அதன் பின்னரும், பொலிஸாரும், குற்றத் தடுப்புப் பிரிவினரும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com