பிழைகண்டு பிடிப்பதிலேயே சம்பந்தன் தனது நேரத்தை செலவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகள், ஒருபோதும் பிரச்சினைகளுக்கான தீர்வு காண உதவாது என்றும், பிழைகண்டு பிடிப்பதிலேயே சம்பந்தன் தனது நேரத்தை செலவிட்டுள்ளார் எனவும், சர்வதேச சமுகத்தால் உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முடியாது எனவே எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உள்ளூர் செயன்முறை தான் ஒரேவழி என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் பட்டினி, மருந்தில்லை என்று ஒருபக்கத்தை மட்டும் சிந்தித்து பார்கும் சம்பந்தன் தெரிவிக்கின்றார். ஆனால் வடக்கிற்கு சென்று பார்த்தவர்கள் எல்லாம் வடக்கின் நிலை மேலும் மேலும் மேன்மையடைந்துள்ளது என தெரிவிக்கின்றனர் என ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சம்பந்தன் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment