Thursday, August 23, 2012

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆதங்கம்

2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு மகிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் 59 பேரில் மூன்று பேரே ஆதரவு தந்தனர் எனவும், எனது தம்பி என்னிடம் வந்து தலைமைத்துவம் வேண்டாம் அதை மகிந்தவுக்கு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் என்று முன்னாள் ஜனாதிபத்தி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கட்சியின் யாப்புக்கு அமைய எனக்கு பரந்த அதிகாரங்கள் இருந்தும், அதை மகிந்த ராஜபக்ஷ எனக்கு வழங்கவில்லை என்றும், அதற்காக நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கவும் இல்லை என்றும், பிரபலமான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மகிந்த ராஜபக்ஷவோ அவரது குடும்பமோ அழித்துவிட இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் அதை இப்போது செய்து கொண்டிருந்தாலும் அதன் ஊடாக அது மீண்டும் வீறு கொண்டு எழும் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com