அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி பிளக்கிடம் கூறுபோகிறாராம் சம்பந்தன்
அரசாங்கம், ஐக்கிய நாடுகளுக்கு எந்த விதத்தில் அறிக்கை சமர்ப்பித்தாலும், இலங்கைக்குள் மறுசீரமைப்பு ஆணையத்தின் தீர்மானம் எதனையும் நிறைவேற்ற விடமாட்டாது என்று அடுத்த வாரம் இலங்கைக்கு வரும் தென்னாசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபட் ஓ பிளக்கிடம் கூறபோவதாக தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவிக்கின்றார்.
திருகோணமலையில் இடம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ' இம்முறை வரும் போது பிளேக் அவர்கள் பல விசேட விடயங்களைக் கொண்டு வருவதாகவும், மறுசீரமைப்பு ஆணையத்தின் சொந்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் மற்றும் கிழக்கு மாகாண தேர்தல் என்பன அவறில் முக்கியத்துவம் பெறுவதாகவும், அரசாங்கத்துடன் மட்டுமின்றி முஸ்லிம் காங்கிரசுடனும் அவர் பேச்சுவார்த்தை நடாத்துவார் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment