பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளித்தலை தடுக்கும் சட்டம் மேலும் கடுமையாகின்றது.
பணச்சலவை மற்றும் பயங்கர வாதத்துக்கு நிதியுதவி செய்தலைத் தடுக்கும் சட்டங்களைக் கடுமையான தாக்கி அவற்றை உலக தரத்துக்கு உயர்த்த விருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறினார். இது தொடர்பாக வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் கொண்டுவந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் சட்டவரைஞர்கள் தேவையான திருத்தங்களை வரைந்துகொண்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
உறுப்பு நாடுகள் இடையே குறிப்பிட்ட சட்டத்தில் நிலவும் வேறுபாடுகளை நீக்குவதற்காக ஜி7 நாடுகளின் ஃபினான்சியல் அக்ஷன் டாஸ்க் ஃ போர்சின் பரிந்துரைக்கு அமைவானது இது. 30 ஆண்டு போர்க்காலத்தில் எல்ரிரிஈ க்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக இந்தச் சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டிருந்தது எனப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment