இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Thursday, August 16, 2012

சந்திரிக்கா- ரணில் ஒப்பந்த ஆவணங்கள் எம்மிடம் உள்ளன!ரணில் முடிந்தால் விவாதத்திற்கு வரவும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வழங்கிய இரகசிய தகவல்கள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாகவும், இதை ரணில் மறுத்தால் இது தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் மைதிரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவிற்கு , காமினி திசாநாயக்காவின் தேர்தல் பிரச்சார தந்திரோபாயங்கள் அடங்கிய இரகசிய தகவலை வழங்கியதாக அமைச்சர் மைதிரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது எனவும், இதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த நிலையிலேயே, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மைதிரிபால சிறிசேனவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் மைதிரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com