Monday, August 6, 2012

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் கார் மீது தாக்குதல். தேர்தல் வன்செயலா?

அக்கரைப்பற்றைச் சேர்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல். தவத்தின் பல்கலைக்கழக நண்பரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீவிர ஆதவாளருமான எம்.எச்.கே. முனாஸ் அவர்களின் கார் நேற்று இரவு (6.08.2012) இனத்தெரியாத நபர்களினால் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கடும் சேதமாக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று 05இல் உள்ள அவரது வீட்டில் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இரவு வேளையில் இனந்தெரியாத நபர்களினால் பின் கண்ணாடி முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. அதாவுல்லாவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இத்தாக்குதல் தேர்தல் வன்முறைகளின் ஆரம்பமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com