புத்தரின் புனித சின்னங்கள் இலங்கையில்.
இந்தியாவின் பண்பாட்டு அமைச்சர் குமாரி செலஜாவினால் விசேட விமானமூலம் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கபிலவஸ்து புத்தரின் புனித சின்னங்கள் 19ம் திகதி காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது அஸ்கிரிய மல்வத்தை மகாநாயக்கர்கள் தலைமையிலான நூற்றுக்கு மேற்பட்ட பிக்குமார் பிரித் ஓதினர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது இதற்கான கோரிக்கையை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விடுத்திருந்தார். 1978 க்குப் பின்னர் மேற்படி புனித சின்னங்கள் இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளன. புனித சின்னங்கள் இன்று மாலையில் இருந்து களனியில் உள்ள மானெல்வத்தை விகாரையில் காட்சிக்கு வைக்கப்படும்.
0 comments :
Post a Comment