புதிய சட்டமா அதிபரை பொலிஸ் வரவேற்றது.
புதிய சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பெர்ணான்டோவை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம் பெற்றது. பொலிஸ் மா அதிபர் என் கே இலங்ககோன் புதிய சட்டமா அதிபரை வரவேற்றதுடன் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.
பொலிஸ் "மக்கள் நட்புறவு பொலிஸ் சேவை" என்று வளர்ச்சி பெறச் செய்தல் அவசியம் என்று சுட்டிக் காட்டிய புதிய சட்டமா அதிபர், தாமதமின்றி நீதியை வழங்குவதற்காக பொலிஸாரும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
0 comments :
Post a Comment