தேர்தல்கள் முடியும்வரை புதிய நியமனங்களை நிறுத்துக.. – தேர்தல்கள் ஆணையாளர்.
வடமத்திய, சபரகமுவை மற்றும் கிழக்கு மாகாண தேர்தல்கள் முடியும்வரைக்கும் அரச சேவைவகான சகல ஆட்சேர்ப்புகளையும் நிறுத்தி வைக்குமாறுகை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய, பொது நிர்வாக மற்றும் உண்ணாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ . பி. அபேகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொது நிர்வாக மற்றும் உண்ணாட்டலுவல்கள் அமைச்சர் டப்.டி.ஜே. செனவிரத்ன, 2005 ம் ஆண்டில் ஆரம்பமான பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 43,000 பட்டதாரிகளை திட்ட அலுவலர்களாக நியமிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தே தேர்தல் ஆணையாளரின் இவ்வாறு பணிப்புரை விடுத்துளார்.
இந்த பட்டதாரிகள் அரசாங்கத் துறையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சட்டபூர்வமான அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் இணைக்கப்படிருந்தனர். 2010 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் சித்தி பெற்ற பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்கிக் கொள்ள திட்டமிட்டிருந்தது. இதை அறிந்த தேர்தல்கள் ஆணையாளர் சகல நியமனங்களையும் தேர்தல் நடைபெறும் தினமான செப்டம்பர் 08 ம் திகதி வரைக்குமாறு பொது நிர்வாக மற்றும் உண்ணாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ. பி. அபேகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment