இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Tuesday, August 7, 2012

மன்னாரில் கடும் வரட்சி. நெற்செய்கைக்கு பாதிப்பு..

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, சிறுபோக நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படடுள்ளது. மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை காரணமாக, மன்னாரில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இதன்மூலம் ஆயிரத்து 60 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 ஆயிரத்து 540 ஏக்கர் சிறுபோக நெற் செய்கை பகுதியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக, அப்பகுதி விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

இவற்றுக்கென பழைய கிணறுகளை புனரமைத்து, புதிய கிணறுகளை அமைத்தும், சிறுபோக நெற் செய்கையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. விவசாயிகளின் தேவைகள் குறித்து ஆராய்ந்த மாவட்ட அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கு இது தொடர்பில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com