Thursday, August 2, 2012

8 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதத்தில் குதித்தார் மட்டு மீள்குடியேற்ற மாதர் சங்கத்தலைவி.

மட்டக்களப்பு, நொச்சிமுனை மீள்குடியேற்ற மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி சந்திரமோகன் அனுசியா எட்டு அம்ச குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்றை மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பித்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தமது கோரிக்கைகளை நிராகரித்தமை, மட்டக்களப்பு மாநகர சபை ஊழல் மோசடி செய்தமை, மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு நீதி வழங்க மறுத்தமை, மட்டக்களப்பு மத்தியஸ்த்த சபை உறுப்பினர் பக்கசார்பாக நடந்து கொண்டமை, மட்டக்களப்பு காத்தானகுடி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கிராமத்தையும் தன்னையும் சட்ட விரோதமாக நடாத்தியமை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சகல பிரச்சினைகளை அறிவித்தும் அதற்கான தீர்வு தராமை, நொச்சிமுனை அரச காணிகளை விற்பணை செய்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இந்த சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தனது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.






1 comments :

Anonymous ,  August 2, 2012 at 5:36 PM  

bravo sister

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com