31,500 வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்காரர்கள் வடக்கிற்குப் பயணம் செய்திருக்கின்றார்கள்.
இந்த வருடம் ஆகஸ்ட்டு வரையில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காரர்களில் 31,500 பேர் வடக்கிற்குப் பயணம் செய்திருக் கின்றார்கள் என்று, நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2011 ஜூலையில் இருந்து 100க்கு அதிகமான நாடுகளில் இருந்து 51,400 க்கும் அதிகமான வெளிநாட்டு கடவுச்சீட்டுகாரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், வடக்கிற்கும் சென்றிருக்கின்றார்கள் என்றும், அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் தமது பூர்வீக வீடுகளையும், சொத்துக்களையும், உறவினர்களையும், பார்க்க வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
22ம் திகதி இரத்மலானையில் உள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்ற 5 வது பன்னாட்டு மாநாட்டில் "மீள ஒருங்கிணைதல் மற்றும் நிலையான அபிவிருத்தி ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்" என்ற தொனிப் பொருளில் பிரதான உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment