Tuesday, July 10, 2012

இலங்கை வீரர்களை டில்லி திருப்பி அனுப்பினால், பயிற்சி அளிக்க பாக். ரெடியாகவுள்ளது!

'இலங்கை விமானப்படை வீரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டால், அவர்களுக்கு பயிற்சி கொடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது' என திவய்ன ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை விமானப் படையினர் 9 பேருக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்குவது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து, அவர்கள் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, பெங்களூருவில் உள்ள எலகங்கா விமான படைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

9 விமானப் படையினரையும், இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பும் விஷயத்தில் புதுடில்லி சங்கடமான நிலையில் உள்ளது. இலங்கைக்கு எந்தவொரு விஷயத்திலும், இந்திய உதவி மறுக்கப்பட்டால், உடனடியாக கைகொடுக்க பாகிஸ்தானும், சீனாவும் தயாராக உள்ளன என்ற விடயமே டில்லியை சங்கடத்தில் தள்ளியுள்ளது.

இலங்கையின் ராணுவம் தொடர்பான விவகாரங்களில் பாகிஸ்தானையோ, சீனாவையே டீல் பண்ண விடாமல், தாமே வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்க விரும்புகிறது புதுடில்லி. இதற்கு காரணம், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசினைதான்.

இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை பாகிஸ்தான் அல்லது சீனா செய்துகொடுக்க முன்வந்தால், இலங்கையின் வடபகுதியில் உள்ள ராணுவத் தளங்களில் அவர்களது நடமாட்டம் ஆரம்பமாகும். அங்கு வைத்து பயிற்சிகள் கொடுப்பதும் நடக்கும்.

வடக்கு இலங்கையின் தலைமன்னார் பகுதியில் உள்ள 'தள்ளாடி' ராணுவ முகாம், ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. இலங்கை விமானப் படைக்கு, இந்திய தெற்கு கடையோரத்துக்கு நெருக்கமாக, பாலாவி, இரணமடு ஆகிய இரு இடங்களில் விமானத் தளங்கள் உள்ளன.

அது, இந்தியா எதிர்நோக்கும் தேசிய அளவிலான பாதுகாப்பு பிரச்னை.

தலைமன்னாரில் இருந்து பாகிஸ்தானின் ளுஐபுஐNவு உளவு மையம் ஒன்று இயங்கினால், என்னாகும் என்ற கவலையும், மாநில அரசியலில் இருக்க வேண்டியது அவசியமில்லை எனவும் அர்ப்ப அரசியல் லாபத்திற்காக ஜெயலலிதா மேற்கொள்ளும் செயற்பாடுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கே பங்கம் என இந்திய கொள்கைவகுப்பு வட்டாரங்கள் கவலை கொண்டுள்ளன.

இந்த சூழ்நிலையிலேயே, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள திவயின பத்திரிகை. 'இலங்கை விமானப்படை வீரர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டால், அடுத்த விமானத்திலேயே அவர்கள் கராச்சிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன' என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப் படையினரை திருப்பி அனுப்ப இந்திய முடிவு செய்தால், அவர்களை பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வர பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என, இலங்கையின் முப்படைகளின் பிரதான அதிகாரி ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com