ருத்திரா இங்குவந்து நிலைமைகளை பார்த்துவிட்டு பேசும்! கூறுகின்றார் கருணா!
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ருத்ரகுமாரனும் அவரது ஆதரவாளர்களும் நேரில் கண்டறிந்துகொள்ள வேண்டுமேன தெரிவித்துள்ள முரளிதரன் மக்களுக்கு பூச்சாண்டிகாட்டும் நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் எனப்படுகின்ற வீ.ருத்ரகுமாரனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான கருணா எனப்படுகின்ற விநாகமூர்த்தி முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
புலிகள் புலம்பெயர் தமிழர்களைமூளை சலவை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள கருணா நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்களால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதனை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம் புலம்பெயர் தமிழ் சமூகத்தை உதாசீனம் செய்யக்கூடாது, ஏனெனில் அவர்கள் அனைவருமே இலங்கையர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறு புலம்பெயர் தமிழ் சமூகம் புறக்கணிக்கப்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதநிலை ஏற்பட்டுவிடும் எனக் கவலைவெளியிட்டுள்ளதுடன் அவர்களை அழைத்து பேசவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும் முனைப்புக்களை வெளிவிவகார அமைச்சு எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள கருணா இலங்கைக்கு விஜயம் செய்த பலர் உண்மை நிலைமையை அறிந்து கொண்டதாகவும், பிரச்சாரங்களுக்கு ஏமாறப் போவதில்லை எனவும் தம்மிடம்குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சுயநலநோக்கிற்காக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளதுடன் வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையின் நிலைமயை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment