ஆட்கடத்தலில் ஈடுபட்ட திருகோணமலையைச் சேர்ந்த இருவர் சென்னை பொலிஸாரால் கைது
ஆந்திரப் பிரதேச கடற்கரையை அடுத்துள்ள "யானம்" என்ற இடத்தி லிருந்து சட்டவிரோதமாக அவுஸ்தி ரேலியாவுக்கு இலங்கை அதிகளை ஜூலை 5ம் திகதி தமது படகில் கடத்துவதற்கு ஆயத்தமாகவிருந்த திருகோணமலையைச் சேர்ந்த ராமச்சந்தின் மற்றும் மோகன் என்பவர்களை கைசெய்துள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கியூ பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட இருவரும் 1997 ல் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்கள் எனவும், அகதி முகாம்களுக்கு வெளியே தங்கியிருந்த இவர்கள் அகதிகளை கடத்துவதற்கு ஒவ்வாருவரிடமும் இருந்து தலா 1.5 இலட்சம் ரூபா பெற்றுள்ளார்கள் என விசாரனையில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment