கொட்டகஹேதென்ன பகுதியில் கருகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு
இரத்தினபுரி காஹவத்தை கொட்ட கஹேதென்ன பகுதியில் தீயில் கருகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சக ருமான அஜித் றோஹன தெரிவித்துள்ளார். இந்த சடலங்கள் இன்று அதிகாலை வீடொன்றிலிருந்து தகருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், 62 வயதுடைய தாயும் 32 வயதுடைய மகளும் அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு பெண்களின் சடலங்களும் மரண பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment