திருமலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்பான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
கிழக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு திருமலை மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகள் தொடரபான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் நாலக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் உரிய தரவுகள் உள்ளடக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக திருமலை மாவட்ட வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
திருமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனவும், எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ண படிவங்களை பெற்றுக் கொள்ளுமாறு பிரதி தேர்தல் ஆணையாளர் நாலக்க ரத்னாயக்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment