ஐதேக மருத்துவரின் சொத்துகளை நாசமாக்கிய ஐவரை மன்றில் ஆஜராக உத்தரவு.
முன்னாள் தூதுவரும் ஐதேகவின் முகாமையாளருமான மருத்துவர் ராஜா ஜோன் புள்ளேயின் மருத்துவ நிலையத்துக்கு தீ வைத்து ஐந்து கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்படுத்திய சந்தேக நபர்களான பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஐந்துபேரை வரும் ஆகஸ்டு 24 ம் திகதி நீதி மன்றத்தில் சமுகமளிக்குமாறு அனுராதபுர மேல்நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரத்நாயக்க கட்டளை பிறப்பித்தார்.
மின்னேரிய பிரதேச சபை உறுப்பினர் அனில் புஷ்பானந்த, சுசந்த குமார பஸ்நாயக்க, ஜே. எச். கமல் காமினி ஜயசூரிய, டிரான்பெரேரா மற்றும் டி. எம். எக்கநாயக்கா என்போர் அந்த ஐவருமாவர்.
0 comments :
Post a Comment